ஆட்சி மாறினால் ரூபா பலப்படும்!
ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மஹிந்த ராஜபக்ஷவின் நிர்வாகத்தின் கீழ் ரூபாவின் பெறுமதியை ஸ்திரப்படுத்திக் காட்டுவோம் என முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
ஆட்சிக்கு வந்து எத்தனை நாட்களில் இவ்வாறு ரூபாவின் பெறுமதியை ஸ்திரப்படுத்துவீர்கள் என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில்,
குமார் சங்கக்காரவிடம் போட்டியில் எவ்வாறு விளையாடுவது என்று கேட்க மாட்டீர்கள். முதல் மணித்தியாலத்தில் எத்தனை ஓட்டம் அடிப்பது எனக் கேட்பது தவறு. அவருக்கு விளையாட வசதி செய்து கொடுத்தால், ஓட்டம் குவித்துக் காட்டுவார்.
அதேபோன்றுதான், அரசாங்கம் அமைந்தால், முதல் நாளிலே செய்து காட்டுவோம். நாம் எவ்வாறு செய்தோம் என்பதை மக்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.