இன்றைய வானிலை! மழை நீடிக்குமாம்!
வங்காள விரிகுடா கடற்பிராந்தியத்தில் தோன்றியிருந்த தாழமுக்கம் அதிகரித்து வருவதால் நாளை 10 ஆம் திகதி வரை நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் மேல், வட மேல், மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில பிரதேசங்களிலும் 150 மில்லி மீற்றருக்கு அதிக மழைவீழ்ச்சியை எதிர்பார்ப்பதுடன், இடியுடனான மழையின்போது காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 70 முதல் 80 கிலோமீற்றர் வரை வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.