கொழும்பை அண்மித்துள்ள சூறாவளி! இலங்கையை எந்த நேரத்திலும் தாக்கும் ஆபத்து!
இலங்கையை எந்த நேரத்திலும் சூறாவளி தாக்கும் ஆபத்துக்கள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது
இலங்கைக்கு அருகில் உள்ள வளிமண்டலத்தில் குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
தென்மேற்கு அரேபிய கடலில் நிலை கொண்டுள்ள LUBAN என்ற சூறாவளி புயல் கொழும்பை அண்மித்த பகுதியில் உள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அடுத்து வரும் 12 மணி நேரங்களில் சூறாவளி புயல் மேலும் தீவிரமடைவதுடன், இலங்கையில் இருந்து நகர்ந்து செல்வதும் சாத்தியம் உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் அடுத்து வரும் இரண்டு, மூன்று நாட்களுக்குள் மழை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் கடல் பிரதேசங்களில் கொந்தளிப்புடன் காணப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேல், மத்திய, சப்ரகமுவ, வடமேல், ஊவா மாகாணத்திலும், மாத்தறை, காலி மாவட்டத்திலும் 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை பெய்யும் அவர் குறிப்பிட்டப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த அழுத்தம் சூறாவளியாக மாற்றமடைய வாய்ப்புகள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த சில நாட்களாக நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக, எட்டுப் பேர் உயிரிழந்துள்ளதுடன் 11 பேர் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.