ஐ.தே.கவுடனான உறவை மைத்திரி முறித்துக்கொள்ள வேண்டும்!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசிய கட்சியுடன் இருக்கும் தொடர்பை முறித்துக்கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
‘தற்போதைய நிலையில் இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பதாக இருந்தால் ஆரம்பமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசிய கட்சியுடன் இருக்கும் தொடர்பை முறித்துக்கொள்ள வேண்டும் என மஹிந்த ராஜபக்ஸ கூறியுள்ளார்.
இந்த அரசாங்கத்தின் போக்கை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது.
இதனால் மாற்று அரசாங்கம் ஒன்றின் தேவை ஏற்பட்டுள்ளது எனவும் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்’ என வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.