ஜப்பானில் மிருகக்காட்சிசாலைப் பணியாளரைக் கொன்ற வெள்ளைப்புலி
ஜப்பானில் உள்ள ஹிராகவாவின் விலங்கியல் பூங்காவின் பணியாளரான அகிரா ஃபுருஷோ என்பவர் அங்குள்ள புலியின் உறைவிடத்தில் கடுமையான இரத்தப்போக்கினால் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
தென்மேற்கு ஜப்பானில் அமைந்துள்ள மிருகக்காட்சிசாலையில் அரிய வகையான வெள்ளைப்புலி ஒன்றினாலேயே பணியாளர் கொல்லப்பட்டதாக்க நம்பபப்படுகின்றது.
தாக்குதல் சம்பவத்திற்கு பொறுப்பாளியாக இருந்த புலி விலங்கியல் பூங்கா ஊழியர்களால் தற்காலிகமாக மயக்க நிலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1972 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இப்பூங்காவில் இடம்பெற்றுள்ள இந்தச் சம்பவம் அங்குள்ள அனைவரையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஜப்பானிய பொலிசார் குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.