ஞானசார தேரர் கைதின் பின்னணியில் சந்திரிகா!
பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கைது செய்யப்பட்டமையின் பின்புலத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் சதித்திட்டங்களே உள்ளன.
அதற்கான தகுந்த ஆதாரங்களும் எம்மிடம் உள்ளன என பொதுபலசேனா அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பஸ்ஸரமுல்லே பஞ்சானந்த தேரர் தெரிவித்தார்.
ஞானசார தேரரின் பிணை நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் பொதுபலசேனா அலுவலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.