மக்களை கட்டுப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது!

மக்களை கட்டுப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது!

ஜனாதிபதி- பிரதமர் மற்றும் அமைச்சர்கள் சுகபோக வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு மக்கள் மீது பொருளாதார சுமையினை சுமத்துவதும், மக்களை கட்டுப்பாட்டுடன் இருக்கக்கூறுவதும் ஒருபோதும் ஏற்றுகொள்ள முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக தெரிவித்தார். அரசாங்கம் கூறும் கதைகள் அனைத்துமே கனவுகள் மட்டுமேயாகும். அரசாங்கம் கையாளும் பொருளாதாரக் கொள்கை இந்த நாட்டினை அழிக்கும் வகையிலேயே அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் பொருளாதார நிலைமைகள் குறித்து மக்கள் விடுதலை முன்னணி கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு பிரேரணையின் போது உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

1978 ஆம் ஆண்டுக்கு பின்னர் சர்வதேசத்தில் இருந்து இலங்கைக்கு வந்த புதிய தொழிநுட்ப தொழிற்சாலை ஒன்றை கூற முடியுமா உங்களால்? இருந்த அணைத்து தொழிற்சாலைகளையும் அழித்துவிட்டீர்கள். உங்கள் எவராலும் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது.

மக்களிடம் இருந்து முழுமையாக பரித்துக்கொண்டு மிகக் சிறிய சலுகைகளையே மக்களுக்கு கொடுக்கிரீர்கள். உங்களின் கதைகள் அனைத்துமே கனவுகள் மட்டுமேயாகும். உங்களின் பொருளாதாரம் இந்த நாட்டினை அழிக்கும் வகையிலேயே அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net