இந்தோனேசிய நிலநடுக்கம்: 2000ஐ கடந்தது உயிரிழப்பு!

இந்தோனேசிய நிலநடுக்கம்: 2000ஐ கடந்தது உயிரிழப்பு!

இந்தோனேசியாவை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2010ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் பலரது உடல்கள் கடற்கரையோர பகுதிகளிலேயே கண்டெடுக்கப்பட்டதாக தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று (செவ்வாய்க்கிழமை) குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் 11ஆம் திகதிவரை மீட்புப் பணிகளை தொடரவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக மேலும் பலரது உடல்கள் கண்டெடுக்கப்படலாமென குறித்த நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

கடந்த செப்டெம்பர் மாதம் 28ஆம் திகதி இந்தோனேசியாவின் சுலவெசி தீவில் 7.5 ரிச்டர் அளவில் ஏற்பட்ட இந்த பாரிய நிலநடுக்கத்தில் சிக்கி 5000இற்கும் அதிகமானோரை காணவில்லையென தெரிவிக்கப்படுகிறது.

குறித்த அனைவரும் மண்ணுக்குள் புதையுண்டிருக்கலாமென அஞ்சப்படுவதோடு, நவீன இயந்திரங்கள் சகிதம் சர்வதேச மீட்புப் படையினரின் உதவியுடன் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக அதிக பாதிப்பை எதிர்கொண்ட பலு நகரம் உள்ளிட்ட மூன்று பிரதேசங்களில் மீட்புப் பணிகள் துரித கதியில் இடம்பெற்று வருகின்றன. மீட்பு நடவடிக்கைகளில் சுமார் 10,000இற்கும் அதிகமானோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net