அதிகரிக்கிறது எரிபொருள் விலை!

அதிகரிக்கிறது எரிபொருள் விலை!

ஒவ்வொரு மாதமும் எரிபொருள் விலை சூத்திர மாற்றத்தின் அடிப்படையில் எரிபொருள் விலை மாற்றமானது இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்குமென நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்த வகையில் பெற்றோல் 92 ஒக்டெய்ன் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாவினாலும் 95 ஒக்டெய்ன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 8 ரூபாவினாலும் சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 8 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதன்படி 92 ஒக்டெய்ன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 155 ரூபாவாகவும் 95 ஒக்டெய்ன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 169 ரூபாவாகவும் சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 141 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுமென நிதியமைச்சு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net