இலங்கை அரசாங்கத்திற்கு கடும் நெருக்கடி கொடுக்கும் பிரித்தானியா ஈழத்தமிழர்கள்.
பிரித்தானியாவில் வசிக்கும் புலம்பெயர் ஈழத்தமிழர்கள் இலங்கை அரசாங்கத்திற்கு பல்வேறு வகையில் கடும் அழுத்தங்களை கொடுத்த வண்ணம் உள்ளனர்.
சிங்கள பேரினவாத அரசு இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு போர்காலம் முடிந்த பிறகும் பல்வேறு வகையான மனித உரிமை மீறல்களை செய்து கொண்டுள்ளது.
இதனால் புலம்பெயர் தேசங்களில் வாழும் ஈழத்தமிழர்கள் பலவிதமான போராட்டங்களை முன்னெடுத்த வண்ணம் உள்ளனர்.
அதன் வரிசையில் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மூலமாக கடும் அழுத்தங்களை தொடர்ச்சியாக கொடுத்து வருகின்றனர்.
10/05/2018 அன்று Leicester West பாராளுமன்ற உறுப்பினர் Liz Kendall உடன் ஆன சந்திப்பு ஒன்றைதமிழர் தகவல் நடுவகத்தின்(TIC)ஏற்பாட்டில் மகேந்திரலிங்கம் யோகானந் தலைமையில் பொன்ராசா புவலோஐன்,விமலாகரன் தர்மபாலன்,மற்றும் ரனிதா தியாகேசு ஆகியோரும் கலந்து கொண்டனர்.
பிரித்தானியாவில் உள்ள தமிழர் தகவல் நடுவகத்தினால்(TIC) முன்னெடுக்கப்பட்டு நடைபெற்றுக்கொண்டிருக்கும் பிரித்தானியா இலங்கைக்கு ஆயுதங்களை விற்பனை செய்வதை தடுக்கும் நடவடிக்கையில் தங்களை இணைத்துக்கொண்ட செயற்ப்பாட்டாளர்கள் கூறுகையில் பிரித்தானியா அரசாங்கம் இலங்கை சிங்கள பேரினவாத அரசுக்கு பல ஆண்டுகாலமாக ஆயுதங்களை விற்பனை செய்து வருகின்றது.குறித்த விடயம் தொடர்பில் பெருமளவிலான பிரித்தானியா பாராளுமன்ற உறப்பினர்களை சந்தித்து வருவதாகவும் பெருவாரியான பா.உ தமக்கு ஆதராவாக குரல் எழுப்புவதாகவும் கூறினார்.
மேலும் அவர்கள் கூறுகையில் பிரித்தானிய அரசின் இச்செயற்பாடானது இலங்கை சிங்கள பேரினவாத அரசுக்கு எதிராக ஐநாவில் கொண்டுவரவிருக்கும் போர்க்குற்ற விசாரணையை மழுங்கடிக்கும் செயலாகவும்,ஈழத்தமிழர்களின் மீது இலங்கை சிங்கள அரசு நடாத்திக்கொண்டிருக்கின்ற இனச்சுத்திகரிப்பை மூடி மறைத்து இலங்கை சிங்கள பேரினவாத அரசுக்கு சர்வதேச அங்கீகாரத்தை வழங்கும் செயலாகவே பிரித்தானியாவின் இவ் ஆயுத விற்பனை சுட்டிக்காட்டி நிற்கின்றது.
2009 ம் ஆண்டு போர் முடிவுற்ற நிலையிலும் பல மில்லியன் மதிப்புமிக்க ஆயுதங்களை இலங்கை அரசாங்கத்திற்கு பிரித்தானியா விற்பனை செய்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழர்கள் மீதான அடக்குமுறை இன அழிப்பு மீண்டும் தொடர்கிறது என்பதனையே இது உறுதி செய்கின்றது.
மேலும் அவர்கள் தெரிவிக்கையில் இலங்கை அரசாங்கத்தினால் ஈழத் தமிழர் மீது நடந்தேறிய இனவழிப்பிற்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் போர்க்குற்ற விசாரணையை இலங்கை அரசுக்கு எதிராக நடாத்த வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையில் பிரித்தானியா அரசு பிரேரனை ஒன்றையும் முன்வைத்திருந்தது.
அதுமட்டுமின்றி மனித உரிமைகளை மீறும் எந்தவொரு நாட்டிற்கும் தாம் ஆயுதங்களை விற்பனை செய்வதில்லை என ஐக்கிய நாடுகளின் ஆயுத வர்த்தக ஒப்பந்தத்தில் 2013 ல் கைச்சாத்திட்ட பிரித்தானியா அதே ஆண்டு காலப்பகுதியில் இலங்கை அரசுக்கு 62 மில்லியன் பவுன்ட்ஸ் பெறுமதியான ஆயுதங்களை விற்பனை செய்திருந்தது என்று பாராளுமன்ற உறுப்பினர்களிடம் சுட்டிகாட்டப்பட்டுள்ளது.
மேலும் இது பற்றி பா.உ கூறுகையில் பிரித்தானியா அரசின் அரசின் இச் செயல் தமக்கு அதிர்ச்சிஅழிப்பதாகவும் இலங்கையில் சிறுபான்மை தமிழ் மக்கள் மீது நடந்தேறிய மனித உரிமை மீறல்களை தாம் அறிவதாகவும்
ஆயுத விற்பனை தொடர்பான அனைத்து கேள்விகளையும் தாம் வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதுவதாகவும் பாராளுமன்றத்தில் இது பற்றிய கேள்வியை தாம் எழுப்புவதாகவும் கூறினார்.