கத்தி முனையில் ஆசிரியையின் தங்கச் சங்கிலி கொள்ளை!
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யுனி பில்ட் தோட்டத்தின் எரோல் பிரிவிலிருந்து கிரிஸ்லஸ் பாம் Chrislas farm தமிழ் வித்தியாலயம் நோக்கி சென்ற ஆசிரியை ஒருவரை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி ஒருவர் ஆசிரியை அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்து சென்றுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த ஆசிரியை 119 என்ற அவசர அழைப்பிற்கு அறிவித்து பின்னர் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு ஒன்றும் செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர் தெரிவித்தார்.
குறித்த ஆசிரியை தினமும் கால்நடையாகவே இவ்வழியாக செல்வதாக கூறினார்.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரனைகளை ஆரம்பித்துள்ளனர்.