கிழக்கு ஆசிரியர்களின் இடமாற்றங்கள் இடைநிறுத்தம்!
கிழக்கு மாகாணத்தில், ஆசிரியர்களின் நிரந்தர, தற்காலிக இடமாற்றங்கள் அனைத்தும், எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சு இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவின் பணிப்புரைக்கு அமைவாகவே இந்த இடமாற்றங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், சுற்றுநிருபத்துக்கு அமைவாக, மகப்பேற்றுக் காலம் வரையிலான இடமாற்றங்கள் மாத்திரம் வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.