சர்வதேச போட்டிகளில் இருந்து பாகிஸ்தான் வீரர் ஓய்வு!

சர்வதேச போட்டிகளில் இருந்து பாகிஸ்தான் வீரர் ஓய்வு!

பாகிஸ்தான் அணியின் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் அப்துர் ரஹ்மான் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

38 வயதாகும் இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு ஒக்டோபர் 1 ஆம் திகதி தென் ஆபிரிக்கா அணியுடனான டெஸ்ட் தொடரில் அறிமுகமானார்.

மேலும் 2014 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இலங்கை அணியுடன் இடம்பெற்ற போட்டியே இவருடைய இறுதி டெஸ்ட் போட்டியாக அமைந்தது.

அத்துடன் ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக, 2006 டிசம்பர் 7 இல் அறிமுகமான இவர், பங்களாதேஷ் அணியுடன் கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4 ஆம் திகதி இடம்பெற்ற போட்டிக்கு பின்னர் அணியில் இடம்பெறவில்லை.

இந்நிலையில் அதன் பின்னர் அணியில் இருந்து ஓரம்கட்டப்பட்ட அவர், சுமார் 4 வருடங்களின் பின்னர் இன்று (புதன்கிழமை) தனது ஓய்வினை அறிவித்துள்ளார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு உலகக்கிண்ண போட்டியில் இவர் தனது திறமையை வெளிப்படுத்தியிருந்த போதும், நொக்அவுட் சுற்றுடன் பாகிஸ்தான் வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 6970 Mukadu · All rights reserved · designed by Speed IT net