சீரற்ற காலைநிலை: மக்களுக்கு எச்சரிக்கை!
வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக நாட்டில் தொடர்ந்தும் அடைமழை பெய்துவருகின்றது.
குறிப்பாக மேல், மத்திய, தென் மற்றும் ஊவா மகாணங்களில் பெய்துவரும் அடைமழை தொடர்ந்தும் நீடிக்கின்றது.
மழை பெய்யும் நேரங்களில் இடியுடன் காற்றும் பலமாக வீசுவதால் மக்களை அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கொழும்பு, இரத்மலானை, களுத்துறை, காலி, இரத்தினபுரி மாவட்டங்களிலேயே அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. குறித்த மழைவீழ்ச்சி இன்று (புதன்கிழமை) காலையும் நீடிக்கின்றது.
குறித்த மாவட்டங்களில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதோடு, 17 பேர் காயமடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.
சுமார் 12,000 பேர் பாதிக்கப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, களுத்துறை மாவட்டத்திற்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பதோடு, பாதிக்கப்பட்ட ஏனைய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கையும் நீடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாளை முதல் மழைவீழ்ச்சி குறைவடையலாமென வளிமண்டலவியல் திணைக்கம் எதிர்வுகூறியுள்ளது.