‘தங்க மீன்கள்’ பட நாயகி சாதனாவிற்கு “டயானா விருது”
‘தங்க மீன்கள்’ படத்தில் சிறு பிள்ளையாக நடித்த சாதனாவின் சேவையை பாராட்டும் வகையில் இளம் சாதனையாளர்களை அங்கீகரிக்கும் சர்வதேச விருதான ‘டயானா விருது’ கிடைத்துள்ளது.
இவர் தற்போது ராம் இயக்கத்தில் மம்முட்டி நடிப்பில் உருவாகிவரும் பேரன்பு படத்தில் பாப்பா என்ற கதாபாத்திரத்தில் மாற்றுத்திறனாளியாக நடிக்கிறார்.
இவர் நடிப்பு, படிப்போடு மட்டுமல்லாது சமூக மேம்பாட்டுக்கான பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
துபாயில் வசித்துவரும் சாதனா, அங்குள்ள மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு உதவும் வகையில் ‘ஸ்பீச் தெரப்பி’, நடனம் போன்ற கலைகளை கற்றுக்கொடுத்து, அவர்களின் குறைகளை நிறைகளாக மாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றார்.
இவரின் சேவையை பாராட்டும் வகையில் இளம் சாதனையாளர்களை அங்கீகரிக்கும் சர்வதேச விருதான ‘டயானா விருது’ வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து நடிகை சாதனாவிற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.