நாட்டில் மீண்டும் கலவரத்தை ஏற்படுத்த மஹிந்த அணி முயற்சி!
விஷம் கலந்த பாலை பகிர்ந்தளித்ததாக தன் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டானது, முஸ்லிம் – சிங்கள மக்களிடையே கலவரத்தை ஏற்படுத்தும் ஒன்றிணைந்த எதிரணியின் முயற்சி என முஜிபுர் ரஹ்மான் குற்றம் சாட்டினார்.
கொழும்பில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”ஆட்சியை கவிழ்க்கும் நோக்குடன் ஒன்றிணைந்த எதிரணியினர் நடத்திய மக்கள் சக்தி கொழும்பிற்கு என்ற பேரணியின் போது விஷம் கலந்த பாலை பகிர்ந்தளித்ததாக என் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
ஒன்றிணைந்த எதிரணியின் போராட்டத் தோல்வியை மூடி மறைத்து, அதனை திசை திருப்பி நாட்டில் மீண்டும் இன கலவரமொன்றை ஏற்படுத்தும் முயற்சியிலேயே இவ்வாறானதொரு குற்றச்சாட்டு என் மீது முன்வைக்கப்பட்டது” எனவும் குறிப்பிட்டார்