மட்டக்களப்பில் பெண் ஒருவருடன் தகாதமுறையில் நடந்த பொலிஸ் சாஜன்!

மட்டக்களப்பில் பெண் ஒருவருடன் தகாதமுறையில் நடந்த பொலிஸ் சாஜன்: மக்களால் நையப்புடைப்பு!

தகாதமுறையில் நடந்து கொண்ட பெண் மற்றும் பொலிஸ் சாஜனை சுற்றிவளைத்த பொதுமக்கள் அவர்கள் இருவரையும் நையப்புடைத்து பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

மட்டக்களப்பு வவுணதீவு பகுதியிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், இதன் பின்னர் குறித்த பொலிஸ் சாஜனை தற்காலிகமாக கடமையில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரியாக கடமையாற்றி வந்த பொலிஸ் சாஜன், வவுணதீவு கரவெட்டி பிரதேசத்தில் குழந்தைகளின் தாய் ஒருவருடன் தகாத உறவு வைத்துவந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2 ஆம் திகதி இரவு பொலிஸ் சாஜன் அப்பெண்ணின் வீட்டிற்கு சென்ற நிலையில், பிரதேச மக்கள் குறித்த வீட்டை சுற்றிவளைத்து இருவரையும் பிடித்து நையப்புடைத்து பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து குறித்த பொலிஸ் சாஜன் பொலிஸ் ஒழுக்க விதிமுறைகளை மீறி செயற்பட்ட காரணத்தையிட்டு அவரை உடனடியாக தற்காலிகமாக கடமையில் இருந்து இடை நிறுத்தியதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Copyright © 3066 Mukadu · All rights reserved · designed by Speed IT net