மஹிந்த தலைமைத்துவத்தை ஏற்பதால் சட்டப் பிரச்சினை ஏற்படாது!
பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தினை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்பதால் எவ்விதமான மாற்றமும் அரசியலில் ஏற்படாது என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
மேலும் மஹிந்தவை ஒரு வரையறைக்குட்பட்ட பொறிக்குள் சிக்க வைக்கும் விதமாகவே இந்த தலைமைத்த்துவ பதவி காணப்படும்.
தலைமைத்துவத்தினை ஏற்பதால் எவ்விதமான சட்டப்பிரச்சினைகளும் ஏற்படாது, அரசியல் பிரச்சினைகள் மாத்திரமே ஏற்படும் ஒரு கட்சியின் தலைமைத்துவத்தினை ஏற்பதை விட நாட்டின் தலைமைத்துவத்தை மஹிந்த ராஜபக்ஷ ஏற்பதே பொருத்தமாக அமையும் எனவும் அவர் தெரிவித்தார்.