ரயிலின் முன் பாய்ந்து பெண் தற்கொலை!
அநுராதபுரம் ரயில் நிலையத்திற்கு அன்மையில் ரயிலின் முன்னால் பாய்ந்து பெண்ணொருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பிலிருந்து அநுராதபுரம் நோக்கி வந்துகொண்டிருந்த எரிபொருள் ரயிலில் பாய்ந்து குறித்த பெண் தற்கொலை செய்துகொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.
உயிரிழந்த பெண் இதுவரையில் அடையாளம் காணப்படாத நிலையில் அவரின் சடலம் அநுராதபுரம் போதணா வைத்திய சாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது என பொலிசார் தெரிவித்தனர்.
எனவே சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.