வெளிநாடுகளுக்கு செல்ல இலங்கையர்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்!
உலகின் பலமான கடவுக்சீட்டை கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னிலை பெற்றுள்ளது.
பாஸ்போர்ட் இன்டெக்ஸ் (Passport Index) என்ற இணையத்தளதினால் வருடாந்தம் மேற்கொள்ளப்படும் தரப்படுத்தலுக்கு அமைய இலங்கையின் கடவுச்சீட்டிற்கு 83வது இடம் கிடைத்துள்ளது.
இலங்கை கடவுச்சீட்டை வைத்துள்ள நபர் ஒருவர் விசா இன்றி உலகின் 47 நாடுகளுக்கு பயணிப்பதற்கு அனுமதி கிடைத்துள்ளது. குறித்த நாடுகளுக்கு சென்ற பின்னர் On Arrival Visa விசா பெற்றுக் கொள்ளும் வசதி 30 நாடுகளுக்கு மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை கடவுச்சீட்டு கொண்டவர்கள் ஏனைய 151 நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதற்கு விசா விண்ணப்பிக்க வேண்டியது அவசியம் என சுட்டிக்காட்டியுள்ளது.
புதிய தரப்படுத்தலுக்கு அமைய முதலிடத்தை சிங்கப்பூர் மற்றும் ஜேர்மன் பெற்றுள்ளன. 165 நாடுகளுக்கு விசா இன்றி அல்லது குறித்த நாடுகளுக்கு சென்ற பின்னர் விசா பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
passportindex இணையத்தளத்தின் தரவுகளுக்கு அமைய இரண்டாவது இடத்தை 11 நாடுகள் பிடித்துள்ளன.
டென்மார்க், சுவீடன், பின்லாந்து, லக்சம்பெர்க், இத்தாலி, பிரான்ஸ், நோர்வே, நெதர்லாந்து, ஸ்பெய்ன், தென் கொரியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இடம்பிடித்துள்ளன.
குறித்த நாடுகளின் கடவுச்சீட்டு கொண்டவர்கள் 164 நாடுகளுக்கு விசா இன்றி பயணிக்கும் வாய்ப்பு உள்ளதாக இன்டெக்ஸ் தரவுகள் தெரிவிக்கின்றன.