அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீன இராணுவத்தின் தளத்திற்கு இடமளிக்கப்பட மாட்டாது என இலங்கை மீண்டும் அமெரிக்காவிடம் உறுதியளித்துள்ளது.
இந்த விடயத்தை ஏஎப்பி செய்தி சேவை தெரிவித்துள்ளது.
ஹம்பாந்தோட்டை துறைமுகம் இராணுவத்தளமாக செயற்பட வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க உதவி ஜனாதிபதி அண்மையில் எச்சரிக்கை ஒன்றை விடுத்திருந்தார்.
இந்த துறைமுக நிர்மாணப் பணிகளுக்காக சீனா 1.4 பில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது.
இந்த நிலையில் அதனை திருப்பி செலுத்த முடியாது போகும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சீனா, துறைமுகத்தில் தமது இராணுவ பிரசன்னத்தை உறுதிப்படுத்தலாம் என அந்த எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து இலங்கையின் பிரதமர் அலுவலம் அமெரிக்காவின் எச்சரிக்கையை நிராகரித்துள்ளது.