இங்கிலாந்து இலங்கை முதலாவது போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது!

இங்கிலாந்து இலங்கை முதலாவது போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது!

இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, இடைவிடாத மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது.

இரு அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று(புதன்கிழமை) தம்புள்ள மைதானத்தில் ஆரம்பமானது.

இந்த போட்டியில் இலங்கை அணி நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.

அதன் பிரகாரம் இங்கிலாந்து அணி 15 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகளை இழந்து 92 ஓட்டங்களை பெற்றிருந்தது.

அணி சார்பில் ஜேசன் ரோய் 24, ஜொன்னி பெயர்ஸ்டோ 25, ஜொய் ரூட் ஆட்டமிழக்காமல் 25, மோர்கன் அட்டமிழக்காமல் 14 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட போது மழை குறுக்கிட்டதால் போட்டி இடைநிறுத்தப்பட்டது.

பின்னர் தொடர் மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 2191 Mukadu · All rights reserved · designed by Speed IT net