சின்மயின் பாலியல் புகாரில் சிக்கிய இலங்கை கிரிக்கெட் நட்சத்திரம்!
பிரபல தென்னிந்திய பாடகி சின்மயி அண்மை காலமாக பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து சமூக ஊடகங்கள் வாயிலாக தைரியமாக கருத்து வெளியிட்டு வருகின்றார்.
கவிபேரரசு வைரமுத்து மீதும் அவர் தைரியமாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றார். இந்நிலையில், பல பெண்கள் தான் எதிர்நோக்கிய பாலியல் தொல்லைகள் குறித்து வெளிப்படையாக கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
சினிமாவில் பிரபலங்களான இருக்கும் நடன இயக்குநர் கல்யாண், பின்னணி பாடகர் கார்த்திக் உள்ளிட்டோருக்கு எதிராகவும் இவ்வாறு பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் லசித் மலிங்கவும் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக சின்மயி டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை பகிர்ந்துள்ளார்.
இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.