ஜாவா, பாலித் தீவுகளை உலுக்கிய நிலநடுக்கம்: மூவர் பலி!

ஜாவா, பாலித் தீவுகளை உலுக்கிய நிலநடுக்கம்: மூவர் பலி!

இந்தோனேசியாவின் ஜாவா, பாலித் தீவுகளைத் தாக்கிய ஆறு ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக அஞ்சப்படுகிறது.

கிழக்கு ஜாவாவின் சுமெனெப் (Sumenep) வட்டாரத்தில் இடிந்த கட்டடங்களின் இடிபாடுகளில் சிக்கி அவர்கள் உயிரிழந்ததாக நம்பப்படுகிறது.

நிலநடுக்கம் இன்று காலை ஏற்பட்டதாக தேசிய பெரிடர் நிறுவனப் பேச்சாளர் தெரிவித்தார்.

பலரும் தூங்கிக்கொண்டிருந்ததால், அவர்கள் உரிய நேரத்தில் அவர்கள், வெளியேற இயலாமல் போனதாக அவர் கூறினார்.

நிலநடுக்கத்தால் அவ்வளவாய் சேதம் ஏற்படவில்லை என்று அவர் கூறினார்.நிலநடுக்கத்தின் அதிர்வு கிழக்கு ஜாவா மாநிலத் தலைநகர் சுரபாயாவில் உணரப்பட்டது.

பாலியில் அனைத்துலக பணநிதியம், உலக வங்கி ஆகியவற்றின் ஆண்டுக்கூட்டங்கள் இந்த வாரத்தில் நடைபெறுகின்றன.

அவற்றில் 19,000க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளும், விருந்தினர்களும் கலந்துகொள்கின்றனர். அவர்களில் அமைச்சர்களும், தலைவர்கள் சிலரும் அடங்குவர்.

பாலிக் கடலில் மையக் கொண்ட கொண்டிருந்த நிலநடுக்கம் சில விநாடிகளுக்கு கட்டடங்களை உலுக்கியதாகச் சம்பவத்தின் போது அங்கிருந்த ராய்ட்டர்ஸ் செய்தியாளர் கூறினார்.

டந்த மாதம் இந்தோனேசியாவின் சுலவெசித் தீவு, இரண்டாயிரம் பேரைப் பலிவாங்கிய 7.5 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தையும் சுனாமியையும் சந்தித்தது

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net