நயன்தாரா முன்னிலையில் இயக்குனர் சர்ஜுனின் திருமணம்!

நயன்தாரா முன்னிலையில் இயக்குனர் சர்ஜுனின் திருமணம்!

லட்சுமி, மா ஆகிய குறும்படங்களையும், சத்யராஜ் நடித்த எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் என்ற படத்தை இயக்கிய சர்ஜுனின் திருமணம் நயன்தாரா முன்னிலையில் நடைபெறவுள்ளது.

தற்போது சர்ஜுன் இயக்கத்தில் நயன்தாரா நடித்து வரும் படத்திற்கு ஐரா என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

திகில் படமாக உருவாகி வரும் ஐரா படத்தில் நயன்தாராவுடன் கலையரசன், யோகி பாபு, ஜேபி ஆகியோரும் நடிக்கிறார்கள். அறம், டோரா முதலான படங்களைப் போல இப்படமும் கதாநாயகியை மையப்படுத்திய படமாக உருவாகி இருக்கிறது.

இந்த படத்தில் நயன்தாரா இரண்டு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஐரா – நயன்தாரா இரண்டு வேடங்களில் நடிக்கும் முதன்முறையாக நடிக்கும் படம்.

நயன்தாராவின் மானேஜரும் அறம், குலேபகாவலி ஆகிய படங்களை தயாரித்தவருமான கோட்டப்பாடி ராஜேஷ் இப்படத்தைத் தயாரிக்கிறார்.

இந்த படத்தின் திரைக்கதையை கேரளாவைச் சேர்ந்த ப்ரியங்கா ரவீந்திரன் என்ற பெண் எழுதியுள்ளார். இவரது சிபாரிசினால் தான் சர்ஜுனிடம் ஐரா கதையை நயன்தாரா கேட்டார்.

ஐராவின் இயக்குநர் சர்ஜுனும், ப்ரியங்காவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கின்றனர். இவர்களது திருமணம் நயன்தாரா முன்னிலையில் கேரளாவில் நடைபெறுகிறது.

Copyright © 7560 Mukadu · All rights reserved · designed by Speed IT net