புலிகளினால் கொல்லப்பட்ட சிங்களவர்களின் எலும்பு கூடுகளே!

விடுதலைப் புலிகளினால் கொல்லப்பட்ட சிங்களவர்களின் எலும்பு கூடுகளே மீட்கப்படுகின்றன!

தமிழீழ விடுதலை புலிகள் காலத்தில் சிங்கள மக்களை கொன்று புதைத்த இடமே மன்னார் மனிதப் புதைக்குழி என நாடாளுமன்ற உறுப்பினர், பத்ம உதயசாந்த குணசேகர தெரிவித்துள்ளார்.

எனினும், தமிழ் புலம் பெயர் அமைப்புக்கள், இராணுவத்தினர் தமிழ் மக்களை கொன்று புதைத்த புதைக்குழிபோல இதனை ஐக்கிய நாடுகள் சபையில் திரிபுப்படுத்திக் காண்பிக்கிறார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

பெருமளவிலான சிறுவர்கள் உள்ளிட்டவர்களின் மனித எலும்புக்கூடுகள் இதுவரையில் மன்னார் மனிதப் புதைக்குழியிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.

இதனை விசாரணை செய்வதற்கு தடயவியல் நிபுணர்கள் இலங்கையிலேயே இருக்கிறார்கள்.

எனினும், திட்டமிட்டப்படி அந்த மனிதப் புதைக்குழி தொடர்பான மாறுப்பட்ட எண்ணக​ருவை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, இந்தியாவிலிருந்து தடயவியல் நிபுணர்கள் அழைத்து வருவதற்கு மன்னார் நீதிமன்றில் அனுமதிக் கோரியுள்ளனர்.

வடக்கு, கிழக்கில் பௌத்த மதத்தின் புராதன சின்னங்கள் அழிக்கப்படுவதை நல்லாட்சி அரசாங்கத்தால், தடுத்து நிறுத்த முடியாது.

ஈராக், சிரியா, இஸ்ரேல் போன்ற நாடுகளில் புத்தர் சிலைகளை அழித்து அல்கொய்தா தீவிரவாத அமைப்புக்கள் செய்து வரும் அட்டூழியங்களைப் போல இலங்கையிலும் நடைபெறும் வரையில் அமைதியாக இருக்க வேண்டாம் என அவர் மேலும் கூறியுள்ளார்.

Copyright © 3364 Mukadu · All rights reserved · designed by Speed IT net