வட்ஸ் அப் வீடியோ அழைப்பால் ஹக் அபாயம்!

வட்ஸ் அப் வீடியோ அழைப்பால் ஹக் அபாயம்!

வட்ஸ் அப் வீடியோ அழைப்பு பயன்படுத்துபவர்களின் கணக்குகள் ஹக் செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக லண்டனைச் சேர்ந்த (ZDnet and The Register) இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வட்ஸ் அப் செயலியை சமீபத்தில் முகநூல் நிறுவனம் தன்வசப்படுத்தியது. வட்ஸ் அப் செயலி, அண்ட்ரொய்டு மற்றும் அப்பிள் ஐபோன்களில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகையில்,வட்ஸ் அப் வீடியோ அழைப்புகளின் மூலம் கணக்குகள் ஹக் செய்யப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதை, கடந்த ஓகஸ்ட் மாதத்திலேயே கண்டறிந்ததாகவும், அந்த தொழில்நுட்ப குறைபாட்டை, ஒக்டோபர் முற்பகுதியில் சரி செய்துள்ளதாக முகநூல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 கோடி பேரின் முகநுால் தகவல்கள், முகநூலில் உள்ள சிறப்பு அம்சமான view as வசதியின் மூலம் திருடப்பட்டுள்ள பரபரப்பு அடங்குவதற்குள்ளாகவே, வட்ஸ் அப் வீடியோ அழைப்பின் மூலம் கணக்குகள் ஹக் செய்யப்படும் வாய்ப்பு குறித்த தகவல், வட்ஸ் அப் மற்றும் முகநூல் பயனாளர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net