வீடுகள் கட்டப்படாத காரணத்தை சபையில் போட்டுடைத்த சுவாமிநாதன்!
வீடுகள் இல்லாதவர்களுக்கு வீடுகளை கட்டிக்கொடுக்க எனது அமைச்சிற்கு போதுமான நிதி ஒதுக்கப்படுவதில்லை எனத் தெரிவித்த மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், அரசாங்கம் எப்போது நிதி ஒதுக்குகின்றதோ அப்போது வீடுகளை கட்டிக் கொடுப்பேன் என்றார்.
எனது அமைச்சுக்கு நிதி ஒதுக்காது என்னால் வீடுகளை கட்டிக்கொடுக்க முடியாது. எனது அமைச்சிக்கு போதிய அளவு நிதி ஒதுக்கப்பட்டால் என்னால் சகல மக்களுக்கும் வீடுகளை வழங்க முடியும். நான் பாகுபாடு இல்லாது சகல மக்களுக்கும் வீடுகளை கட்டிக்கொடுப்பேன்.
வடக்கு- கிழக்கை விடவும் அனுராதபுரம் மாவட்டத்திற்கு அதிக அளவிலான வீடுகளை கொடுத்துள்ளோம் என்றார்.
பாராளுமன்றத்தில் வாய்மூல வினாக்கான விடை நேரத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரகுமான், யுத்தத்தால் பாதிகப்பே அனுராதபுரம் மாவட்டத்தில் வீடுகள் இல்லாது கஷ்டப்படும் மக்களுக்கான வீடுகள் பெற்றுகொடுக்கும் நடவடிக்கை எடுக்கப்படாத? வடக்கு கிழக்குக்கு கொடுக்கும் சலுகைகளை அனுராதபுரம் மக்களுக்கும் பெற்றுக்கொடுக்க வேண்டும் என கேள்வி எழுப்பின்னர். அதற்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் சுவாமிநாதன் மேற்கண்டவாறு கூறினார்.