‘ஆண் தேவதை’ படத்தை வெளியிட நீதிமன்றம் தடை!

‘ஆண் தேவதை’ படத்தை வெளியிட நீதிமன்றம் தடை!

தாமிரா இயக்கத்தில் சமுத்திரக்கனி – ரம்யா பாண்டியன் நடிப்பில் உருவாகியுள்ள `ஆண் தேவதை’ திரைப்படத்தை வெளியிட சென்னை உரிமையியல் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

படத் தயாரிப்புப் பணிகளுக்காக பெற்ற கடன் தொகையில், ரூ.22 இலட்சத்தை திரும்பத் தராததால் படத்துக்கு தடை கோரி நிஜாம் மொய்தீன் என்பவர் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது நாளை வெளியிடப்படவிருந்த இப்படத்தை நாளை வெளியிடக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

சிகரம் சினிமாஸ் சார்பில் அ.பக்ருதீன், ஷேக் தாவூத் மற்றும் சைல்ட் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் முஸ்தபா, குட்டி இணைந்து தயாரித்துள்ள படம் `ஆண் தேவதை’.

சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன் கணவன், மனைவியாக நடித்திருக்கும் இந்த படத்தில் ராதாரவி, இளவரசு, காளி வெங்கட், சுஜா வருணி, ஹரீஷ் பேரடி, அபிஷேக், கவின், பேபி மோனிகா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜிப்ரான் இசையில், விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படம் நாளை வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net