நியூயோர்க்கில் நாய்கள் சிறுநீர் கழிக்க டிரம்பின் சிலை!
நியூயோர்க் நகரத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் சிலையை நாய்கள் சிறுநீர் கழிப்பதற்காக வைக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
புரூக்ளின் நகரின் சாலையோரத்தில் சிறிய அளவில் புல் வளர்க்கப்பட்டு அதில் சுமார் ஒரு அடி உயரமுள்ள டிரம்ப்பின் மார்பளவு சிலை வைக்கப்பட்டுள்ளது.
அதன்கீழ் பகுதியில் “என் மீது சிறுநீர் கழிக்கவும்” “Pee On Me” என எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சிலையை வடிவமைத்து வைத்த பில் கேப்லே, டிரம்ப் ஒரு ஜனாதிபதியாக செயல்படவில்லை என்ற கோபத்தின் வெளிப்பாடாக அந்தச் சிலையை வைத்துள்ளதாகத் தெரிவித்தார்.