வெள்ளைச் சீனிக்கான கட்டுப்பாட்டு விலை அறிவிப்பு

வெள்ளைச் சீனிக்கான கட்டுப்பாட்டு விலை அறிவிப்பு

வௌ்ளைச் சீனிக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பான விஷேட வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. சீனிக்கான கட்டுப்பாட்டு விலையானது இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள்ளது.

பொதி செய்யப்பட்ட வௌ்ளைச் சீனி ஒரு கிலோ கிராமின் அதிகபட்ச விலையாக 105 ரூபாவெனவும் பொதி செய்யப்படாத வௌ்ளைச் சீனி ஒரு கிலோ கிராமின் அதிகபட்ச விலையாக 100 ரூபாவெனவும் நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சீனியின் அதிகபட்ச மொத்த விற்பனை விலையாக 92 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net