ஹம்பாந்தோட்டையில் விபத்து – 50 பேர் படுகாயம்!
ஹம்பாந்தோட்டை – லுனுகம்வெஹர பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 50 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதனாலேயே லுணுகம்வெஹர பேருந்து நிலையத்திற்கு அருகில் இன்று(வெள்ளிக்கிழமை) நண்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.