ஐந்தாயிரம் ரூபாய் நாணயத்தாள் ஐம்பதாயிரமான சுவாரஷ்ய கதை!
அண்மையில் இலங்கையில் கைப்பற்றப்பட்ட போலி நாணயத்தாள்கள் குறித்து தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அத்தியட்சகர் அம்பாவில தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அண்மையில் பெருந்தொகையான ஐந்தாயிரம் ரூபா பெறுமதியான போலி நாயணத்தாள்கள் கைப்பற்றப்பட்டன.
ஐந்தாயிரம் ரூபாய் நாணயத்தாள் தோற்றத்தில் ஒரு பூஜ்ஜியம் அதிகரித்து ஐம்பதாயிரம் ரூபாய் நாணயத்தாளாக அச்சிடப்பட்டிருந்தன. இந்த சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பொலிஸ் அத்தியட்சகர் அம்பாவில,
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. எனினும், விசாரணைகள் இன்னும் நிறைவு செய்யப்படவில்லை. இதன் காரணமாக மேலதிக தகவல்களை வெளியிட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஐம்பதாயிரம் ரூபாய் போலி நாணயத்தாள்களை அண்மையில் குருநாகல் பகுதியில் இருந்து பொலிஸார் கைப்பற்றியிருந்தனர். இது குறித்து குற்றப்புலனாய்வு பிரிவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் அந்த பகுதியில் உள்ள பிரபல வர்த்தகர் ஒருவரும், பிரத்தியேக வகுப்பு ஆசிரியர் ஒருவருமாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.