பரபரப்பாகும் கொழும்பு அரசியல்! அடுத்த பிரதமர் மஹிந்த!

பரபரப்பாகும் கொழும்பு அரசியல்! அடுத்த பிரதமர் மஹிந்த!

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்றை மேற்கொள்ளும் முயற்சியில் சர்வதேச நாடு ஒன்று தீவிரமாக செயற்பட்டு வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை, பிரதமர் பதவியில் அமர்த்தும் நோக்கில் தீவிரமாக செயற்பட்டு வருகிறது.

இது தொடர்பில் இலங்கையிலுள்ள சிறிய அரசியல் கட்சிகளுக்கு கடும் அழுத்தம் கொடுத்து வருவதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மஹிந்தவை பதவியில் அமர்த்தும் பணியில் தீவிரமாக செயற்பாடுமாறு பிரதான நாடொன்றின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த பிரதமருக்கு மிகவும் தகுதியான நபர் மஹிந்த ராஜபக்ச என்பதே அந்த நாட்டின் கருத்தாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த நாட்டின் உயர் மட்ட அதிகாரிகள் மூவர் கொண்ட குழுவின் பரிந்துரைக்கமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

சமகாலத்தில் இலங்கையில் இடைக்கால அரசாங்கம் ஒன்றை உருவாக்கும் தீவிர முயற்சியில் மஹிந்த தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.

எனினும் அந்த முயற்சி தோல்வி அடையும் என ஆளும் தரப்பின் அமைச்சர்கள் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சர்வதேச நாடொன்று ஆட்சி மாற்றத்திற்கான காய்நகர்த்தலில் ஈடுபட்டுள்ளமை கொழும்பு அரசியலில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Copyright © 0432 Mukadu · All rights reserved · designed by Speed IT net