போதைப்பொருள் சுவாசக் குழாயினுள் சிக்கியதால் தமிழ் இளைஞன் பலி!

போதைப்பொருள் சுவாசக் குழாயினுள் சிக்கியதால் தமிழ் இளைஞன் பலி!

ஹட்டன் புகையிரத நிலையத்தில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞனின் பிரேத பரிசோதனை அறிக்கை நேற்று வெளிவந்துள்ளது.

இதில், குறித்த இளைஞன் “பாபுல்” என்ற போதைப்பொருளை உட்கொண்டுள்ளதுடன், அந்த போதைப்பொருள் சுவாசக் குழாயினுள் சிக்குண்டமையினாலேயே உயிரிழந்துள்ளார்.

டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் திருமதி இனோக்கா ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

ஹட்டன் புகையிரத நிலையத்தில் கடந்த புதன்கிழமை இரவு, கொழும்பு – மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த சுப்பையா தர்மலிங்கம் என்ற இளைஞன் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இதையடுத்து குறித்த இளைஞனின் சடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு பிரே பரிசோதனை இடம்பெற்றுள்ளது.

இதன்போது குறித்த இளைஞனுக்கு போதைப்பொருள் சுவாசக் குழாயினுள் சிக்குண்டமையினாலேயே மரணம் ஏற்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.

குறித்த இளைஞன் தலவாக்கலையை பிறப்பிடமாக கொண்டவரும், திருமணம் முடித்து மட்டக்குளி பகுதியில் வசித்து வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

மேலும், இவர் புதன்கிழமை தலவாக்கலைக்கு வருகை தந்து மீண்டும் வீடு திரும்பிய போது ஹட்டன் புகையிரத நிலையத்தில் வைத்து மாரடைப்பு ஏற்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை உயிரிழந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நபர் பாபுல் என்ற போதைப்பொருளை அதிகமாக பாவித்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net