ஸ்மார்ட் செல்போன்களால் இளம் சமூகத்திற்கு ஆபத்து!
அதிகளவில் போதைப்பொருளுக்கு அடிமையாகி இருப்பது மற்றும் ஸ்மார்ட் செல்போன்களை பயன்படுத்துவது என்பன காரணமாக உலகத்தில் உள்ள இளம் சமூகம் மனநோய் ஏற்படும் அச்சுறுத்தலை எதிர்நோக்கி வருவதாக தேசிய மனநல சுகாதார அறிவியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பு புதிதாக மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
ஸ்மார்ட் செல்போன்களில் வெளியாகும் காந்த அலைகள் மனிதர்களின் மூளையின் செயற்பாடுகளை நேரடியாக பாதிப்பதாக இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய மனநல சுகாதார அறிவியல் நிறுவனத்தின் விசேட மருத்துவ நிபுணர் கபில ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக மனநோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பை காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனை தவிர ஸ்மார்ட் செல்போன்களில் வெளியாகும் காந்த அலைகள் நரம்பு மண்டலத்தையும் பாதிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.