ஆளும் கட்சியினர் வெளிநாடு செல்ல தடை!
ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டணி அரசாங்கத்தின் நான்காவது வரவு செலவுத்திட்டத்தை நிதியமைச்சர் மங்கள சமரவீர எதிர்வரும் நவம்பர் மாதம் 5ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்பிக்க உள்ளதுடன் வரவு செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் 8ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இம்முறை வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் நடைபெறும் காலப்பகுதியில் அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மருத்துவ சிகிச்சைக்காக அன்றி வேறு எந்த காரணங்களுக்காகவும் வெளிநாடு செல்ல அரசாங்கம் தடைவிதித்துள்ளது.
இம்முறை வரவு செலவுத்திட்டமானது அரசாங்கத்தின் எதிர்கால இருப்பது சம்பந்தமான தீர்மானகரமானது என்பதால், இது குறித்து அரசாங்கம் கூடிய கவனத்தை செலுத்தியுள்ளது. இதற்கு அமைய ஆளும் கட்சியினர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.