இது பெற்றோருக்கான செயலி!
பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளின் ஸ்மார்ட் கைப்பேசியின் பயன்பாட்டை வரையறை செய்ய ‘ஃபேமிலி லிங்க்’ எனும் அப்ளிகேஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த வசதியை கூகுள் அறிமுகப்படுத்தி உள்ளது. இதைப் பயன்படுத்த கூகுள் கணக்கு இருந்தால் போதுமானது.
இதன் மூலம் பெற்றோர்கள் தங்கள் மகனோ, மகளோ ஸ்மார்ட் கைப்பேசியை பயன்படுத்தியது போதும் என்னும்போது மொபைலை லொக் செய்ய முடியும்.
அத்துடன் செயலிகளை ப்ளாக் செய்யவோ, தரவிறக்கம் செய்வதையோ தடுக்க முடியும். முக்கியமாக தங்களின் குழந்தைகள் எங்கே இருக்கிறார்கள் என்பதையும் கண்டறிய முடியும்.
முதல் கட்டமாக இந்த வசதி ஆண்ட்ராய்ட் பயனர்களுக்கு மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இவ்வசதி 13 வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டாலும் பெரியவர்களும் இதைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
அதே நேரத்தில் இதைப் பயன்படுத்துபவருக்குக் கண்காணிக்கப்படுவதில் விருப்பம் இல்லையெனில், பெற்றோர்களிடம் கடவுச்சொல்லை பகிர வேண்டியதில்லை.