“இந்து சமுத்திர பிராந்தியத்தில் முக்கிய நாடாகும் இலங்கை”

“இந்து சமுத்திர பிராந்தியத்தில் முக்கிய நாடாகும் இலங்கை”

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் முக்கிய நாடான இலங்கை நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது என ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் விசேட தூதுவர் பீற்றர் தொம்சன் தெரிவித்தார்.

மேலும் இந்து சமுத்திரப் பிராந்தியம் பல்வேறு வளங்கள் நிறைந்த சொத்தாகும். தற்போது இச்சமுத்திரப் பிராந்தியம் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்து வருகின்றது. எனவே அதனைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இந்து சமுத்திரப் பிராந்திய நாடுகளுக்கு உள்ளது.

இது வெறுமனே வார்த்தைகளுக்கான நேரமல்ல. மாறாக செயல்களுக்கான நேரம் என்பதை உணர்ந்து பிராந்திய நாடுகள் சமுத்திரப் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகளை செயலில் காண்பிக்க வேண்டும்.

‘இந்து சமுத்திரம் – எமது எதிர்காலத்தை வரையறுத்தல்’ எனும் இந்து சமுத்திரப் பிராந்திய நாடுகளுக்கிடையிலான சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net