இந்தோனேசியாவில் வெள்ளப்பெருக்கு மண்சரிவில் சிக்கி 21 பேர் உயிரிழப்பு!

இந்தோனேசியாவில் வெள்ளப்பெருக்கு மண்சரிவில் சிக்கி 21 பேர் உயிரிழப்பு!

இந்தோனேசியாவில் சீரற்ற வானிலையால் பெய்த கனமழை காரணமாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

அந்நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு சுமத்ரா மாகாணங்களில் பல்வேறு கிராமங்களில் 500க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. மேலும் 3 பாலங்களும் அடித்துச் செல்லப்பட்டன.

வடக்கு சுமத்ராவைச் சேர்ந்த கிராமத்து பள்ளியில் வகுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அருகில் உள்ள ஆற்று நீர் பள்ளிக்குள் புகுந்தது.

இதில் சுவர் இடிந்து விழுந்ததில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒரு மாணவனை காணவில்லை என்று மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதே போன்று ஆற்று வெள்ளத்தில் வாகனம் அடித்துச் செல்லப்பட்டதில் மேலும் இருவர் உயிரிழந்தனர்.

Copyright © 7470 Mukadu · All rights reserved · designed by Speed IT net