சாவகச்சேரியில் வாள்களுடன் பூசகர் வீட்டுக்குள் நகை, பணம் கொள்ளை!

சாவகச்சேரியில் பூசகர் ஒருவரது வீட்டுக்குள் வாள்களுடன் புகுந்த கும்பல் ஒன்று 15 பவுண் நகைகள் மற்றும் பணம் என்பவற்றை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

நுணாவில் குளம் கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு அருகில் உள்ள பூசகர் வீட்டில் நேற்று சனிக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் புகுந்த கொள்ளையர்களே இவ்வாறு கொள்ளையில் ஈடுபட்டு உள்ளனர்.

முகங்களை துணிகளால் மூடிக்கட்டியவாறு எட்டு பேர் கொண்ட கும்பல் ஒன்று வாள்களுடன் வீட்டுக்குள் புகுந்து வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தி அறை ஒன்றினுள் பூட்டி வைத்து விட்டு வீட்டினை சல்லடை போட்டு இரண்டு மணி நேரம் தேடுதல் நடத்தி உள்ளனர்.

அதன் போது வீட்டில் இருந்த 15 பவுண் நகை மற்றும் பணம் என்வற்றை கொள்ளையிட்டு சென்று உள்ளனர்.

அத்துடன் அருகில் இருந்த அம்மன் ஆலய கதவு திறப்பு கோர்வையையும் எடுத்து சென்று ஆலயத்தை திறக்க முற்பட்டு உள்ளனர். அதனை திறக்க முடியாததால் திறப்பினை கதவிலையே விட்டு விட்டு தப்பி சென்று உள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸாருக்கு தகவல் வழங்கபட்டதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

Copyright © 4276 Mukadu · All rights reserved · designed by Speed IT net