ஜனாதிபதி வேட்பாளரை மகிந்தவே தீர்மானிப்பார்!

ஜனாதிபதி வேட்பாளரை மகிந்தவே தீர்மானிப்பார்!

பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது குறித்த இறுதிமுடிவை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே எடுப்பார் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொடகமவில் இடம்பெற்ற எலிய அமைப்பின் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பொது எதிரணியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது குறித்து அறிந்துகொள்வதற்கு ஐக்கியதேசிய கட்சியே அதிக ஆர்வத்துடன் உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கியதேசிய கட்சி இரண்டு ஜனாதிபதி தேர்தல்களில் தனது தலைவர் போட்டிபோடுவதற்கு அனுமதிக்காத கட்சி எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது குறித்து கவலைப்படாமல் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுவதற்கான உரிய சரியான தந்திரோபாயங்களை பொது எதிரணி முன்வைக்கவேண்டும் எனவும் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாங்கள் உரிய தந்திரோபாயங்களை முன்வைத்தால் எதிர்தரப்பு வேட்பாளர் யாராகயிருந்தாலும் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்த நிகழ்வில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்த்தன கோத்தபாய ராஜபக்சவையே ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தவேண்டும் என தெரிவித்துள்ளார்.

Copyright © 6153 Mukadu · All rights reserved · designed by Speed IT net