தேசிய அடையாளஅட்டைக்கான கட்டணத்தை கிராம உத்தியோகத்தரிடம் செலுத்த முடியும்!
தேசிய அடையாளஅட்டையைப் பெற்றுக்கொள்வதற்கான கட்டணத்தை, கிராம உத்தியோகத்தரிடம் செலுத்த முடியும் என ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கான ஆலோசனைகளை வழங்கியுள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணத்திலக்க குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, தேசிய அடையாளஅட்டையைப் பெற்றுக்கொள்வதற்கான 100 ரூபா கட்டணத்தை கிராம உத்தியோகத்தரிடம் செலுத்த முடியும்.
இது குறித்து உள்நாட்டு அலுவல்கள் அமைச்சிடம் வினவியபோது,
ஆட்பதிவுத் திணைக்களத்தின் வேண்டுகோளுக்கு அமைய இதற்கான அனுமதியை வழங்கியதாக அமைச்சின் செயலாளர் எஸ்.டீ. கொடிகார கூறினார்.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் 1,980 கிராம உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடம் நிலவுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எதிர்வரும் 22 ஆம் திகதி மேலும் 300 பேருக்கு கிராம உத்தியோகத்தர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளாகவும் எஸ்.டீ. கொடிகார மேலும் தெரிவித்துள்ளார்.