பிரபாகரன் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரி வெளிப்படுத்தியுள்ள விடயம்!
வடக்கில் போர் நடந்தாலும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் காடுகளை பாதுகாத்துள்ளதாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கம்பஹா மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில், நாட்டில் உள்ள காடுகளில் வட மாகாணத்திலுள்ள காடுகளே அடர்த்தி கூடியதாக காணப்படுகின்றன.
அங்கு முப்பது வருடங்களாக போர் நடந்தாலும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் காடுகளை அழியாமல் பாதுகாத்துள்ளார்.
எனவே பிள்ளைகளின் பிறந்தநாளின் போது கேக் வெட்டாமல் மரங்களை நடுவதுடன், அன்பளிப்பாக ஏனையவர்களுக்கு மரக் கன்றுகளை வழங்குமாறும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.