மஹிந்த அணிக்கு அதிகார பேராசை!

மஹிந்த அணிக்கு அதிகார பேராசை!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆதரவு அணியான கூட்டு எதிர்கட்சிக்கு அதிகார பேராசை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இரத்மலானையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“நாட்டில் தேர்தலுக்கு புறம்பாக அரசாங்கங்கள் அமைந்ததில்லை. வடக்கு, கிழக்கில் பயங்கரமான போர் நடைபெற்றது. தெற்கில் பயங்கரமான போராட்டங்கள் நடந்தன.

அப்போதும் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் நாம் ஆட்சி அதிகாரத்தை கொடுக்கவில்லை.

நாட்டில் எப்போதும் தேர்தல்கள் மூலமே ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டன. இலங்கையர்கள் என்ற முறையில் இது குறித்து நாங்கள் பெருமை கொள்ள வேண்டும்.

கூட்டு எதிர்க்கட்சியினருக்கு பொறுமை இல்லை. 2020 ஆம் ஆண்டு வரை காத்திருங்கள். அதிகார பேராசை. பெரிய இடத்தை கைப்பற்ற முயற்சிக்கின்றனர். இதற்கு மக்கள் இடமளிக்க மாட்டார்கள்“ என தெரிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net