வறுமையான மாணவர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான தகவல்!

வறுமையான மாணவர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான தகவல்!

பெருந்தோட்டத் தொழிலாளர் கல்வி நம்பிக்கை நிதியத்தினால் (CEWET) புலமைப் பரிசில்கள் வழங்கப்படுவதற்காக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

இந்தப் புலமைப் பரிசில்கள் க.பொ.த உயர்தரம், பட்டப்படிப்புக் கற்கை நெறிகள் மற்றும் இலங்கையின் ஏதேனும் அரசாங்க தொழில்நுட்பக் கல்லூரிகளில் தொழில்நுட்பக் கல்வியை மேற்கொள்ளும் மாணவர்களுக்கானவை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

க.பொ.த சாதாரண தரத்தில் (குறைந்தது 6 திறமைச் சித்திகளுடன்) சித்தியடைந்தவர்கள் அல்லது உயர் தரத்தைச் சித்தியடைந்தவர்கள் மற்றும் 25 வயதிற்கு குறைந்தவர்கள் இந்தப் புலமைப் பரிசில்களுக்கு விண்ணப்பிப்பதற்குத் தகுதியானவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பிறப்புச் சான்றிதழ், க.பொ.த சாதாரண தரம் அல்லது உயர் தரப் பரீட்சைப் பெறுபேற்றுத் தாள்கள், பெற்றோர்களது சமீபத்திய சம்பளத் தாள் விபரம் மற்றும் பெற்றோரது வேலை தொடர்பாக தோட்ட அத்தியட்சகரினது அத்தாட்சி என்பவற்றின் போட்டோப் பிரதிகளுடன் இணைந்ததாக அனுப்பி வைக்கப்படுதல் வேண்டும்.

விண்ணப்பப் படிவங்கள் இந்திய உயர் ஸ்தானிகராலயம், கொழும்பு www.hcicolombo.org எனும் இணையத்தள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

விண்ணப்பப் படிவங்கள் இந்திய உயர் ஸ்தானிகராலயம், 36-38 காலி வீதி, கொழும்பு-03 மற்றும் இந்திய பிரதி உயர் ஸ்தானிகராலயம், இல. 31, ரஜபிகில்ல மாவத்தை, கண்டி ஆகிய இடங்களிலிருந்தும் பெற்றுக் கொள்ள முடியும்.

இதேவேளை, முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் செயலாளர், CEWET , இந்திய உயர் ஸ்தானிகராலயம், த.பெ எண் 882, கொழும்பு- 03 என்ற முகவரிக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 9ஆம், 2018 எனும் திகதிக்கு முன்னதாக கிடைக்கும் வகையில் அனுப்பப்படுதல் வேண்டும்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net