3 கோடி முகப்புத்தக பயனாளர்களின் முக்கிய தகவல்கள் திருட்டு

3 கோடி முகப்புத்தக பயனாளர்களின் முக்கிய தகவல்கள் திருட்டு

3 கோடி முகப்புத்தக பயனாளர்களின் பிறந்த திகதி, கல்வி, உள்பட பல முக்கிய தகவல்கள் இணையத்திருடர்களால் திருடப்பட்டுவிட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் போது, முகப்புத்தகத்தில் உள்ள 5 கோடி வாக்காளர்களின் தகவல்களை கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் திருடியதாக நியூஸ் 4 சனல் செய்தி வெளியிட்டதனையடுத்து அமெரிக்க தேர்தல் விவகாரத்தில் முகப்புத்தகத்தின் பங்களிப்பு இருந்துள்ளதாக வெளியான தகவலையடுத்து சர்ச்சைகள் ஏற்பட்டிருந்தன.

இந்த நிலையில் தற்போது 3 கோடி முகப்புத்தக பயனாளர்களின் பிறந்த திகதி, கல்வி, உள்பட பல முக்கிய தகவல்கள் இணையத்திருடர்களால் திருடப்பட்டுவிட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

1.5 கோடி முகப்புத்தக பயனாளர்களின் பெயர், தொடர்பு விவரங்கள் மற்றும் பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டு விட்டதாகவும் 1.4 கோடி பயனாளர்களின் பெயர்கள் மற்றும் தொடர்பு விவரங்களை இணையத் திருடங்கள் திருட முயற்சித்துள்ளதாகவும் முகப்புத்தக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் முகப்புத்தகத்தின் தொழில்நுட்பத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பாதுகாப்பு குறைபாட்டை அந்நிறுவனம் சரிசெய்து வரும் நிலையில், மீண்டும் 3 கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net