ஒரு மில்லியன் பணியாளர்கள் வேலையிழக்கும் அபாயம்!

ஒரு மில்லியன் பணியாளர்கள் வேலையிழக்கும் அபாயம்! எதனால் தெரியுமா?

தொழிநுட்ப வளர்ச்சி காரணமாக ஒரு மில்லியன் பேர் வேலையை இழக்கும் அபாயம் காணப்படுவதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இதுதொடர்பில் சற்று விரிவாக பார்ப்போம், “டிஜிட்டைசேஷன் அல்லது டிஜிட்டலைசேஷன் என்னும் கணினி மயமாக்கலால் இன்னும் 12 ஆண்டுகளில் தற்போதிருக்கும் வேலைகளில் சுமார் ஒரு மில்லியன் வேலைகள் தேவையற்றதாகக் கருதப்படும் சூழல் உருவாக இருப்பதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.

தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் சுமார் 800,000 பேர் வேலையிழப்பார்கள். அதே நேரத்தில் புதிதாக உருவாக்கப்படும் தகவல் தொழில்நுட்ப பணிகளைச் செய்வதற்கு பயிற்சியளிக்க வேண்டிய அவசியமும் ஏற்படும் என பிரபல கன்ஸல்டன்சி நிறுவனம் ஒன்று எச்சரித்துள்ளது.

மனிதர்கள் செய்யும் பல வேலைகளை ஆட்டோமேஷன் எடுத்துக் கொள்ளும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், உலக பொருளாதார மன்றம், 2021 ஆண்டளவில் ஐந்து மில்லியன் வேலைகளை ரோபோக்கள் எடுத்துக் கொள்ளும் என எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய ஆய்வு, சுவிட்சர்லாந்தில் என்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதில் கவனம் செலுத்துகின்றது.

2030 ஆண்டளவில் மனிதர்கள் செய்யும் வேலைகளில் 20 முதல் 25 சதவிகிதம் வேலைகள் தானியங்கி மயமாகும் என அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.

புதிய பணித்தேவைகளை எதிர்கொள்ளும் வகையில், பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என கூறும் ஆய்வாளர்களில் ஒருவரான Marco Ziegler, அது மிகவும் கடினமானது, என்றாலும் செய்யக்கூடியதுதான் என்கிறார்.

எதிர்காலத்தில் பல மிகு திறன் பணியிடங்களை நிரப்புவதற்காக வெளிநாட்டவர்களை எதிர்பார்க்க வேண்டிய சூழல் ஏற்படலாம் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

தகவல் தொழில்நுட்பப் பணியாளர்களின் தேவை 3,000 இலிருந்து 10,000 ஆக உயரும் என்று கணிக்கும் அவர், இந்த வெற்றிடத்தை நிரப்ப சுவிட்சர்லாந்து தகுதி படைத்த அகதிகளைக் கொண்டு பணியிடங்களை நிரப்ப வேண்டியிருக்கும் எனவும் கூறியிருக்கின்றார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net