இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமைகளை பொறுப்பேற்றார்.

கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணர் கடமைகளை பொறுப்பேற்றார்.

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் இன்றையதினம்(16) இரண்டாவது மகப்பேற்று மருத்துவ நிபுணரும் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் மகப்பேற்று வைத்திய நிபுணர் இல்லாத நிலையில் கர்ப்பிணித் தாய்மார்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் கடந்த 17-09-2018 அன்று மத்திய சுகாதார அமைச்சினால் மகப்பேற்ற வைத்திய நிபுணர் டி.எல்.டபிள்யூ.குணவர்த்தன நியமிக்கப்பட்டிருந்தார்.

இதன் தொடர்ச்சியாக மத்திய சுகாதார அமைச்சினால் மேலும் ஒரு மகப்பேற்றியல் நிபுணர் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன்படி வைத்திய கலாநிதி எம்.ஆர். விதானதந்திரிகே இன்று கிளிநொச்சி வைத்தியசாலையில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்த நியமனத்துடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் இரண்டு மகப்பேற்றியல் நிபுணர்கள் கடமையில் இருப்பார்கள் எனச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net