எமில் ரஞ்சனின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு!
2012ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சனின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பிலான வழக்கு இன்று(செய்வாய்க்கிழமை) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போதே சந்தேக நபரை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதேவேளை, குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் முன்னாள் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவிற்கமைய அவர் கடந்த 25ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.